கோர தாண்டவம் ஆடிய கஜா புயல்…. 22 மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை….

Published : Nov 16, 2018, 07:12 AM ISTUpdated : Nov 16, 2018, 08:07 AM IST
கோர தாண்டவம் ஆடிய  கஜா புயல்…. 22  மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை….

சுருக்கம்

கஜா புயல் புரட்டிப் போட்ட மாவட்டங்கள் மற்றும் கனமழை பெய்து வரும் மாவட்டங்கள் என மொத்த 12 மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.  தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது.

கஜா புயலின் கடைசி பகுதி நாகை - வேதாரண்யம் இடையே   தற்போது கரையை கடந்து வருகிறது, கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 1 மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதே நேரத்தில் கஜா தீவிர புயல் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து, 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். இதனால், உள்மாவட்டங்களில் புயல் செல்லும் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கஜா புயல் காரணமாக பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கஜா புயல் காரணமாக 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகை, கடலுர், ராமநாதபுரம், திருவாருர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவங்கை, அரியலூர் , தேனி, மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் மதுரை, தூத்துக்குடி, பெரம்பலூர்.  திண்டுக்கல், திருவண்ணாமலை,விருதுநக்ர், திருச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ் - பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!