பெருங்காற்றுடன் கரையை கடக்கத் தொடங்கிய கஜா ….கோர தாண்டவம் ஆடிய புயல்… கரையைத் தொட்ட கண் பகுதி….

Published : Nov 16, 2018, 01:25 AM IST
பெருங்காற்றுடன் கரையை கடக்கத் தொடங்கிய  கஜா ….கோர தாண்டவம் ஆடிய புயல்… கரையைத் தொட்ட கண் பகுதி….

சுருக்கம்

கஜா புயலின் முக்கிய பகுதியான கண் பகுதி தற்போது நாகை – வேதாரண்யம் இடையே கரையைக் கடந்து வருவதால் வரலாறு காணாத அளவுக்கு பெருங்காற்றும், பேய்மழையும் கொட்டி வருகிறது. நாகை,திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்நது 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.  

கஜா' புயல் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியது,. கஜா புயலின் முன்பகுதி வேதாரண்யத்திற்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது.

 

இதனால் நாகை,  கடலூர்,  திருவாரூர் மாவட்டங்களில் மணிக்கு100 முதல்110 கி.மீ. வேகத்தில் காற்றுவீசுகிறது.. புயலின் முக்கிய பகுதியான  மையக் கண் பகுதி கரையை கடந்து வருகிறது.

இதையடுத்து  அந்த மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு தற்போது மழை பெய்து வருகிறது. கஜா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில் நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயங்கர காற்று வீசி வருவதுடன் மழையும் கொட்டி வருகிறது.

பல இடங்களில் பலத்த காற்றில் வீட்டின் கூரைகள் பறந்து சென்றன.. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் முற்றிலும் இருளில் மூழ்கியுள்ளன.

வேதாரண்யம் அருகே பெருங்காற்றில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் விழுந்தன. 50 க்கும் மேற்ப்பட குடிசைகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து அங்கு தங்கியிருந்தவர்கள் சர்ச் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கஜா புயல் கரையைக் கடந்து வருகிறது,

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!