நித்யானந்தா கவலைக்கிடம்..வெளியான அதிர்ச்சி தகவல்.! கடைசியில் சிவாஜி ஸ்டைலில் ட்விஸ்ட் !!

Published : Jun 14, 2022, 06:01 PM ISTUpdated : Jun 14, 2022, 06:06 PM IST
நித்யானந்தா கவலைக்கிடம்..வெளியான அதிர்ச்சி தகவல்.! கடைசியில் சிவாஜி ஸ்டைலில் ட்விஸ்ட் !!

சுருக்கம்

Nithyananda : கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. 

எப்போதும் தன்னை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் தனக்கென தனி தேசத்தை உருவாக்கி அதில் தன்னையே கடவுளின் அவதாரமாக கூறிக்கொண்டு தனது பக்கதர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார் நித்யானந்தா.ஆனால் கடந்த சில காலமாக தான் சமாதி நிலையில் இருப்பதாக தகவல் வெளியிட்டார், ஆனால் சில நாட்களாக நித்தி பற்றி சில அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளியானது.

கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

ஆனால் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவின. இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஒரு பேஸ்புக் பதிவை நித்தியானந்தா வெளியிட்டிருந்தார். அதில் கைலாசாவாசிகளே, சமாதி நிலை 5 வகைப்படும்.அவற்றில் முதல் நிலை சுசுப்தி- இது ஆழ்ந்து தூங்கும் நிலை, 2. ஸ்வப்னா- கனவு நிலை, 3. ஜெக்ரத்- விழித்திருக்கும் நிலை, 4. துரியா- சுயநினைவு நிலையில் மகா கைலாசத்தை உணருதல், 5. துரியாதிதா.

உயிருடன் இருக்கும் நிலை. நான் தொடர்ந்து துரியாதிதா நிலையில் இருந்து வருகிறேன். உங்களது பிரார்த்தனைகள் கைகூடியுள்ளது. தினந்தோறும் நித்ய சிவ பூஜையின் போது நான் ஜக்ரத் நிலை அதாவது விழித்திருக்கும் நிலையில் இருப்பேன். மேற்கண்ட 5 நிலைகளும் எனக்கு அவ்வப்போது ஏற்படுகின்றன. இதைத்தான் சகஜ சமாதி என்பார்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி- என்னால் சரளமாக பேச முடிகிறது.

நான் சமாதி நிலையில் இருந்த போது நடந்த அனைத்து சம்பவங்களும் என்னை சுற்றியிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டன. சகஜ சமாதிக்கு வந்துவிட்டால் இனி நான் வழக்கமாக சத்சங்கங்களை நடத்துவேன். ஆன்மீக வகுப்புகளையும் மேற்கொள்வேன். அனைவருக்கும் நன்றி என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.மறுபடியும் முதல்ல இருந்தா என்று நெட்டிசன்கள் நித்யானந்தாவை வச்சு ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு
அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!