இன்று தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான தொழில்துறை சம்பந்தமாக சில கோரிக்கைகளை முன் வைத்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.
மேலும் இந்த சந்திப்பின் பொழுது தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே ஏற்பட்ட முறிவு குறித்தும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் திரு அண்ணாமலை அவர்களிடம், விவாதித்ததாக செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
மத்தியில் பாஜக மற்றும் அதிமுக இடையே ஒரு நல்லுறவு இருந்து வந்த நேரத்தில், பல அதிமுக தலைவர்களை கடுமையாக சாடி தொடர்ச்சியாக பேசி வந்தார் திரு. அண்ணாமலை அவர்கள். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பாஜக உடனான கூட்டினியை முறித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அறிவித்தது.
undefined
தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி - நிதியமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த கே. அண்ணாமலை!
அதிமுகவின் இந்த முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தன்னுடைய முடிவுமட்டுமல்ல, ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு என்று பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ச்சியாக பல அதிமுக தலைவர்களும் திரு. அண்ணாமலை அவர்களை கடுமையாக தாக்கி பேசியது அனைவரும் அறிந்ததே. இந்த இக்கட்டான சூழலில் தான் தனது பாதயாத்திரை நடத்தி வந்த திரு. அண்ணாமலை அவர்கள், டெல்லிக்கு சென்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நாளை அக்டோபர் 3ம் தேதி கோவைக்கு உத்தியோகபூர்வ பயணமாக வரவுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், விரைவில் தமிழக பாஜக மேல் இட பொறுப்பாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சில செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து, பாஜக கட்சியிடம் இருந்தோ அல்லது நிர்மலா சீதாராமனிடமிருந்தோ எந்த விதமான தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் அமைச்சர் ஆனதுக்கு துர்கா ஸ்டாலின் தான் காரணம்..” உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் மெய்யநாதன்