கிராமசபைக் கூட்டத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அமைச்சரை அதிரவைத்த முதியவர்

By Velmurugan s  |  First Published Oct 2, 2023, 6:02 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்த முதியவர் அமைச்சர் மனோ தங்கராஜிடம் வழங்கி இதனை மாற்றித் தருமாறு கேட்டதால் கிராம சபை கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெண்கள் என பலரும் வந்து தங்களது பகுதி குறைகளை எடுத்துக் கூறினர். பிரச்சினைகள் உடனடியாக சரி செய்து தருவதாக மாவட்ட ஆட்சியரும், அமைச்சரும் வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில் திடீரென 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கையில் பழைய ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்து அமைச்சரிடம் கொடுத்து புதிய நோட்டு மாற்றி தர வேண்டுமென கேட்டனர். 

Latest Videos

undefined

குடும்ப வறுமையால் பணிக்கு சென்ற இளம் பெண் பட்ட பகலில் வெட்டி படுகொலை; ஒருதலை காதலால் வெறிச்செயல்

அதனைப் பார்த்த அமைச்சர் மனோ தங்கராஜ் அதிர்ச்சி அடைந்தார். 2016ம் ஆண்டு 500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டு, பின்னர் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் வந்தது. தற்போது 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என தெரிவித்து அதனை திரும்ப பெறுவதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2016ம் ஆண்டு தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு பெரியவர் கிராம சபை கூட்டத்தில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

காலம் ரொம்ப கெட்டு பொயிருக்கு; பசங்கள முறையா கண்காணிங்க - அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை

அமைச்சர் மனோ தங்கராஜ் முதியவரை சமாதானப்படுத்தும் விதமாக தான் மாற்றி தருகிறேன். அதிகாரிகளிடம் சொல்கிறேன் கூறிச் சென்றார். மேலும்  அப்பகுதியில் பஞ்சாயத்து, ஊராட்சி என பொதுமக்களுக்காக இருக்கும் தலைவர்கர்கள் மற்றும் அதிகாரிகள் கூட இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே இதற்கு காரணம் எனவும், கடந்த ஏழு வருடமாக இந்த ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது தெரியாமல் பெரியவர் இருந்துள்ளார். இந்த சம்பவம் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!