வடசென்னையில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க அண்ணாமலை கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம்
POPSK எனப்படும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால்துறை ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்காக தலைமை தபால் நிலையம் அல்லது தபால் அலுவலகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மண்டத்தில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரத்தில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மோடியை சந்திக்க மீண்டும் அனுமதி கேட்ட ஸ்டாலின்.! அமைதி காக்கும் மத்திய அரசு
அண்ணாமலை வைத்த கோரிக்கை
இந்நிலையில் வடசென்னையில் புதிதாக பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதாவது வடசென்னை மக்கள் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் சாலிகிராமம் அல்லது தாம்பரம் செல்ல வேண்டியுள்ளது. பாஸ்போர்ட் எடுக்க மட்டுமின்றி அவற்றை புதுப்பிக்கவும், திருத்தங்கள் செய்யவும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே அருகிலேயே POPSK அலுவலகம் இருந்தால் நன்றாக இருக்கும் என வலியுறுத்தியிருந்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில்: பாஸ்போர்ட் சேவா கேந்திரா இல்லாததால், வடசென்னையில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க, வட சென்னையில் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து இறக்கப்படுகிறாரா அண்ணாமலை? காரணம் இதுதான்?
பரிந்துரைக்கப்பட்ட பிற பகுதிகளில் போதுமான இடம் இல்லாததால், பெரியார் நகர் பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் தேவையான இடத்தை வழங்குவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.