
தமிழக சட்டப் பேரவையில் இன்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை குறித்து நடைபெற உள்ள விவாதத்தின்போது பள்ளி மாணவர்களுக்கு புதிய பல சலுகைகளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவி ஏற்ற பிறகு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்புவது, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என்ற முறையை மாற்றி கிரேடு முறை அமல்படுத்தியது, 11 ஆம் வகுப்புக்கும் பொத தேர்வு என பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப் பேரவையில் பள்ள்க் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, மாணவர்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவர்களுக்கு இலவச இன்சூரன்ஸ், இலவச மருத்துவ சிகிச்சை போன்றவைகள் வழங்கப்படவுள்ளன. பள்ளிகளில் யோகா கற்றுத்தர 13000 ஆசிரியர்கள் நியமக்கப்பவுள்ளனர்.
இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 1 மாணவர்களுக்கு ஸ்டார்ட் லேப், நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகம் வகையில் சிறப்பு வகுப்புகள், மூன்று வண்ணங்களில் புத்தகப் பை வழங்குவது குறித்து ஆண்வு செய்ய குழு அமைத்தல் போன்ற பல அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என தெரிகிறது.