
மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை 45 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை வரை விசைப் படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் நடப்பாண்டு முதல் இந்த தடைக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு வரை தடைகாலம் அமுலில் இருந்ததது.
இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராக இருந்தனர். படகுகளின் உறுதி தன்மை, நம்பர் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளையும் மீன் வளத்துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ளது.
61 நாட்கள் தடைகாலம் என்பதால் தற்போது அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர், ராமேஸ்வரம், கன்னியாகுமர், நாகை, புதுக்கோட்டை என்னிட்ட இடங்களில் இன்று அதிகாலையில் திரண்ட மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கடலுக்குள் இறங்கினர். மீனவர்களை அவர்களது உறவினர்கள் உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.
மீனவர்கள் 61 நாட்களுக்கும் பின் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதால் மீன்களின் விலையும் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சென்னை காசிமேடு பகுதியில் மீன் மார்க்கெட் தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வராததால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மின் பிடிக்க செல்லவில்லை.