சதி திட்டம் தீட்டி மேம்பாலம் என்ற பெயரில் தடுப்பணைக் கட்டும் ஆந்திர அரசு; தடுக்க முயற்சிக்குமா தமிழக அரசு?

 
Published : Jun 15, 2017, 07:01 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
சதி திட்டம் தீட்டி மேம்பாலம் என்ற பெயரில் தடுப்பணைக் கட்டும் ஆந்திர அரசு; தடுக்க முயற்சிக்குமா தமிழக அரசு?

சுருக்கம்

Andhra Pradesh government to build a dam in Tamil Nadu

வேலூர்

மேம்பாலம் கட்டுகிறோம் என்று ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 36 அடி உயரத்தில் புதிய தடுப்பணையை கட்டி வருகிறது. இதனை எதிர்க்காமல் தமிழக அரசு என்ன செய்கிறது என்று தமிழக விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புல்லூர் வழியாக தொடங்கி காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது பாலாறு.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே 32 தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில் வாணியம்பாடி கும்பம் இடையில் கங்குந்தி அருகில் பாலாற்றின் குறுக்கே பாலாறு கிராமத்தில் 50 அடி உயரத்தில் மேம்பாலம் அமைக்கிறோம் என்றத்உ.

அதற்கான பணிகள் கடந்த 32 நாள்களாக நடந்து வருகிறது. அங்கு, 50 அடி உயரத்திற்கு மேம்பாலம் அமைவதால், கீழே சுமார் 36 அடி அளவிற்கு பாலத்தின்கீழ் தடுப்பணை போல் அமைத்து தண்ணீரை தேக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடன்து வருகிறது.

பாலாற்றின் குறுக்கே பொகிலிரேவிலும் இரண்டு தடுப்பணைகள் உள்ளன. இதில் ஒரு தடுப்பணையின் உயரத்தை 15 அடியில் இருந்து 36 அடியாக உயர்த்திக் கட்டவும் ஆய்வு பணிகள் முடிந்து கட்டுமான பொருட்கள் வந்து இறங்கியுள்ளன.

இதனை தவிர கங்குந்திக்கும் கனேசபுரத்திற்கும் இடையே மற்றொரு தடுப்பணையும் பாலாற்றின் குறுக்கே அமைக்க இருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல். இந்ப் பணிகள் அனைத்தையும் மூன்று மாதங்களில் முடிக்கவுள்ளனர்.

இந்த அணைகள் கட்டப்படுவதால் தமிழகத்தின் வடமாவட்டமான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வடசென்னை ஆகிய ஐந்து மாவட்டங்கள் குடிநீர், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறும்.

ஆந்திர அரசு சதி திட்டம் தீட்டி மேம்பாலம் என்ற பெயரில் தடுப்பணை அமைப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இப்படி ஒரு சதி திட்டத்தை ஆந்திர அரசு அரங்கேற்றும்போது தமிழக அரசு என்ன செய்கிறது? தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இதனை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவர்” என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்துகள்.. காவு வாங்கப்பட்ட 9 உயிர்கள்.. அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்
தமிழகத்தையே உலுக்கிய விபத்து.. அரசு பேருந்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு!