காவல்துறையில் 54 புதிய அறிவிப்புகள்…!!!

Asianet News Tamil  
Published : Jul 08, 2017, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
காவல்துறையில் 54 புதிய அறிவிப்புகள்…!!!

சுருக்கம்

new 54 announcements for TN police

தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை குறித்த மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் காவல்துறையில் 54 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது :

பொள்ளாட்சியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படும். ஊர்காவல்படையின் இடர்படியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

100 காவல்நிலையங்களில் ரூ. 2.50 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும். ரூ. 50 லட்சம் செலவில் கையடக்க ஜாமர் சாதனம் வாங்கப்படும்.

ரூ. 35 லட்சம் செலவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் சாதனம் 2 வாங்கப்படும். சென்னை நகரில் போக்குவரத்து விதிமீறுவோரை தண்டிக்க ரூ.6.42 கோடியில் மின்ரசீது முறை அமல்படுத்தப்படும்.

ரூ. 19 லட்சம் செலவில் அதிரடிப்படை வீர்ர்களுக்கான குண்டு துளைக்காத 2 பொதியுறைகள் வாங்கப்படும். 2 ஆம் நிலை காவலர் முதல் தலைமைக் காவலருக்கான தொகை ரூ.4000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்படும்.

பெட்ரோலிய பொருட்களை பகுப்பாய்வு செய்வதற்கான கருவி ரூ.50 லட்சத்தில் வாங்கப்படும். வீரதீர செயலுக்காக பதக்கம் பெறும் காவலர்களுக்கான பணப்படி ரூ. 300லிருந்து ரூ. 900 ஆக உயர்த்தப்படும்.

காவலர் பதக்கம் பெற்றவர்களுக்கான மாதாந்திர பதக்கப்படி ரூ.200 லிருந்து ரூ. 300 ஆக உயர்த்தப்படும். காவலர்களின் மெச்சதக்க பணிக்காக வழங்கப்படும் வெகுமதியுடன் கூடிய ரொக்கத்தொகை அதிகரிக்கப்படும்.

ரொக்கத்தொகை டிஎஸ்பிக்கு ரூ. 10 ஆயிரத்திலுருந்து, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். சார்பு ஆய்வாளர் முதல் காவல் ஆய்வாளருக்கான தொகை ரூ.6000 லிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.

தொழில்நுட்ப சிறப்பு சேவையில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கான பரிசுத்தொகையும் உயர்த்தப்படுகிறது. சேலம் கர்ப்பூர், நாமக்கல் வெப்படை, தருமபுரி கோபிநத்தத்தில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.

மேலும் கோவை தடாகம், ஆத்தூர் நகரம், சுல்தான் பேட்டையில் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். தமிழ்நாடு காவல்துறையினருக்காக ரூ.3.71 கோடியில் சபர் அரங்கம் அமைக்கப்படும்.

பாதுக்காப்பு பணியின் போது பயன்படுத்த 7 நடமாடும் கழிவறை ஊர்திகள் வாங்கப்படும். கிணத்துகடவில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.

இவ்வாறு 54 அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடிய போலீசார்