"களவு போன சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடம்" – பேரவையில் முதல்வர் பெருமிதம்!

Asianet News Tamil  
Published : Jul 08, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"களவு போன சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடம்" – பேரவையில் முதல்வர் பெருமிதம்!

சுருக்கம்

TN got first place in rescue lost properties

களவுபோன சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக காவல்துறை குறித்த மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் எதிர்கட்சிகள் தமிழகத்தில் குற்றசம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

இதற்கு இன்று பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, களவுபோன சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் கடந்த 3 ஆண்டு தகவலின் அடிப்படையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாகவும், அரசின் சிறிய குறைகளை கூட பூதாகரமாக்கி அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வானையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சாதி சமய பூசல்கள் இல்லாமல் அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மிக்க் குறைவான அளவிலேயே குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2011 முதல் 2006 வரை ஜெயலலிதா காவல்துறையில் அறிவித்த 680 அறிவிப்புகளில் 99.5% நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரையில் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடிய போலீசார்