
அத்தியாவசிய தேவைகளையும், வசதிகளையும் செய்து கொடுக்காத எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, பெட்ரோங் பங்க் உரிமையாளர்கள் வரும் 12ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினமும்ரி மாற்றம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தது. இதற்கு, அகில இந்திய பெட்ரோல் டீலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. அதில், வெளிப்படைதன்மை இல்லை என கூறப்பட்டது.
மேலும், தானியங்கி தொழில்நுட்ப வசதி, 100 சதவீத பெட்ரோல் பங்க்குகளிலும் பொருத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன. அதை இதுவரை நிறைவேற்றவில்லை.
இதனால், கடந்த 5ம் தேதி முதல் பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதில்லை என முடிவு செய்தனர்.
இதைதொடர்ந்து வரும் 12ம் தேதி நாடு முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி எண்ணெய் நிறுவனங்களுடன் கடந்த 29ம் தேதி 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது.
அப்போது விலை மாற்றம் செய்யும்போது ஏற்படும் பாதிப்புக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன. ஆனால், அதற்கான தேதியும், அமலுக்கு வருவது பற்றியும் குறிப்பிடவில்லை.
இதனால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அனைவரும் பாதியில் முடித்து கொண்டு வெளியேறிவிட்டனர்.
இதைதொடர்ந்து, 30ம் தேதி மதியம், 2 மணி வரை பொறுத்திருக்கும்படி எண்ணெய் நிறுவனங்கள் கேட்டு கொண்டதாக தெரிகிறது. அதன் பின்னரும், உறுதியான பதில் வரவில்லை.