பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்…

Asianet News Tamil  
Published : Jul 08, 2017, 09:48 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்…

சுருக்கம்

Primary school teachers struggle to emphasize various demands ...

தருமபுரி

தருமபுரியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கே.வி.ரவி தலைமை தாங்கினார். வட்டாரச் செயலர் எம்.வைதீசன், மாவட்ட துணைத் தலைவர் எச்.சிவசண்முகம், மாவட்டப் பொருளர் அருள்பிரசாத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இந்த போராட்டத்தில், “மாதாந்தோறும் தாமதமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும். 

ஊழியர் விரோதப் போக்கை கைவிட வேண்டும். 

புத்தகங்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். 

தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாகனத்தின் மூலம் பள்ளிகளில் நேரடியாக வழங்கிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி