
தருமபுரி
சிவகங்கையில் வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்ட இணை செயலாளர் காவேரி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட செயலாளர் இளங்குமரன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர்.
அப்போது, “வருவாய்த்துறை ஊழியர் சங்க நிர்வாகிகளை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தாக்குதல் சம்பவத்திற்கு மூலகாரணமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.