
தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் நியமனத்திற்க்கான சட்டதிருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை பல்கலை கழக சட்ட திருத்த மசோதாவையும் அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகின்றது.
கடந்த இரண்டு நாட்களாக காவல் நிலையங்கள் குறித்த மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் நியமனத்திற்க்கான சட்டதிருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை பல்கலை மற்றும் மற்ற பல்கலைகழகங்களின் துணைவேந்தர் நியமனம் குறித்த 2 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த மசோதாக்களை சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே அவசர சட்டம் மூலம் சென்னை பல்கலை மற்ற பல்கலை கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அவசர சட்டத்திற்கு சட்டப்பேரவையின் ஒப்புதல் பெறுவதற்கு சட்ட்திருத்த மசோதா தாக்கலாகிறது.