
இந்தியாவை பொறுத்த வரை தக்காளி என்பது சமையலுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருள்.. இன்னும் சொல்ல போனால் அனைத்து உணவுகளுக்குமே தக்காளி தேவைப்படுகிறது. தக்காளி இல்லாமல் சமைக்கும் உணவுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதனால் தக்காளி என்பது சமையலில் தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே தக்காளி விலையும் முக்கியமாக கருதப்படுகிறது. தக்காளியின் விலை சமையலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தக்காளி விலை தற்போது தாறுமாறாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளியின் விலை, 2 நாட்களுக்கு முன்பு கிடுகிடுவென உயர்ந்து ரூ.70-க்கு விற்கப்பட்டது. இந்த விலை மேலும் உயர்ந்து தற்போது ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் ரூ.130 –க்கு கூட தக்காளி விற்கப்படுவதாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு 800 டன் வரை தக்காளி வரும் என்றும், ஆனால் தற்போது தக்காளி வரத்து 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளதால் தான் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பக்ரீத் பண்டிகை : சொந்த ஊருக்கு போறவங்களுக்கு சிறப்பு ரயில்.. குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே..
வரத்து குறைவு, கோடை மழை உள்ளிட்ட காரணங்கள் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களுக்கு தக்காளி விலை இதே அளவில் தான் நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சூழலில் தக்காளி விலையை பல்வேறு மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், “ தக்காளி தானே, விலை கம்மி என்று நினைக்காதீங்க, நான் கொஞ்ச காஸ்ட்லி” என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் “ தக்காளி இல்லாமல் சமைக்க முடியுமா? கூகுளில் தேடு மக்கள்.. என்ற போட்டோவை போட்டு “ எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் தங்கம் விலை குறைந்ததை குறிப்பிட்டு,” அவனவன் தக்காளி வாங்கவே கஷ்டப்படுறான் போவியா” என்று வடிவேலு மீமை பதிவிட்டுள்ளார்.
தக்காளியும், ஆப்பிளும் ஒரே விலைக்கு விற்கப்படுவதை குறிப்பிட்டு, “ என்ன என்ன வெறுப்பேத்துறியா என்று ஆப்பிள் தக்காளியிடம் கேட்பது போன்ற ஒரு மீமை பதிவிட்டுள்ளார்.
மேலும் தக்காளியை பெட்ரோல் டீசல் விலையுடன் ஒப்பிட்டும் பல மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.