இதை செய்யுங்க.. நீட்டை ரத்து செய்யலாம்… ஏ.கே. ராஜன் குழு அறிக்கையை ரிலீஸ் செய்த தமிழக அரசு

By manimegalai aFirst Published Sep 20, 2021, 8:18 PM IST
Highlights

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நிலைமை இப்படி இருக்க, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இந்த குழுவானது ஆய்வுகளை மேற்கொண்டு 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை  ஜூலை 14ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந் நிலையில் ஏ.கே. ராஜன் அறிக்கையில் உள்ள விவரங்களை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: நீட்டை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதற்காக தனி சட்டம் இயற்றலாம். பின்னர் அந்த தனிச்சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறலாம்.

இப்படி செய்வதால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும். எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை 12ம் வகுப்பு மார்க் அடிப்படையில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்று உள்ளன.

 

click me!