தமிழகத்தில் நேற்று 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழகத்தில் நேற்று 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
undefined
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன. தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று 2வது முறையாக தமிழகம் முழுவதும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 15 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கிட்டத்தட்ட 16. 43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டு உள்ளது. 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்த நிலையில் குறிப்பிட்ட இலக்கான 15 லட்சம் என்பதை தாண்டி சாதனை படைத்திருக்கிறது. அதாவது 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.
கடந்த 12ம் தேதி நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 20 லட்சம் பேர் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கிட்டத்தட்ட யாரும் எதிர்பார்க்காத வகையில் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.