பானிபூரி மசாலாவில் புழு… வடமாநில நபரை கம்பத்தில் கட்டி ‘குசலம்’ விசாரித்த நாம் தமிழர் தம்பிகள்..

Published : Sep 19, 2021, 08:42 PM IST
பானிபூரி மசாலாவில் புழு… வடமாநில நபரை கம்பத்தில் கட்டி ‘குசலம்’ விசாரித்த நாம் தமிழர் தம்பிகள்..

சுருக்கம்

சென்னை அருகே பானிபூரியில் புழுக்கள் நெளிய அதை விற்ற வடமாநில இளைஞரை நாம் தமிழர் கட்சியினர் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை: சென்னை அருகே பானிபூரியில் புழுக்கள் நெளிய அதை விற்ற வடமாநில இளைஞரை நாம் தமிழர் கட்சியினர் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மேனாம்மேட்டில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக நாம் தமிழர் தொண்டர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்காக காத்திருந்தனர்.

அப்போது பட்டரைவாக்கம் வழியே வந்து கொண்டிருந்த வட மாநில பானிபூரி வியாபாரியிடம் நாம் தமிழர் கட்சியினர் சாப்பிடுவதற்காக பானிபூரி வாங்கி இருக்கின்றனர். அப்போது பானிப்பூரிக்கு தரப்பட்ட உருளைக்கிழங்கு மசாலாவில் புழுக்கள் நெளிந்ததை கண்டு ஷாக்காகி இருக்கின்றனர்.

அந்த பானிபூரியை கீழே கொட்டியவர்கள் ஒரு கட்டத்தில் வியாபாரியை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் விசாரணைக்காக போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர். பொதுவாக பானிபூரி எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது பற்றிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை தந்திருக்கிறது. இப்போது பானிபூரியில் புழுக்கள் நெளிந்திருப்பதை அறிந்த பானிபூரி பிரியர்கள் ஷாக்காகி உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!