என்னாச்சு..? 16வது நாளா இப்படி நடக்குதே…? நம்ப மறுக்கும் வாகன ஓட்டிகள்

Published : Sep 20, 2021, 08:26 AM IST
என்னாச்சு..? 16வது நாளா இப்படி நடக்குதே…? நம்ப மறுக்கும் வாகன ஓட்டிகள்

சுருக்கம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை 16வது நாளாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை 16வது நாளாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.

சர்வதேச சந்தை விலை நிலவரத்தின்படி, இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த மார்ச் இறுதியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட மே மாதம் வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லாமல் பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன. 

அதன் பின்னர் ஜெட் வேகத்தில் எகிறிய பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை தாண்டியது. வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கடுமையான உயர்வை எட்டியதால் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கினர். தமிழகத்தில் விலை உயர்வை பெரும் அதிருப்தியை கொடுக்க, தேர்தல் வாக்குறுதி பட்ஜெட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. அதன் காரணமாக விலையானது 100 ரூபாய்க்கும் கீழே இறங்கியது.

இந் நிலையில் தமிழகத்தில் 16வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி இன்றும் விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 98.96க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.26க்கும் விற்கப்படுகிறது.

இந்த விலை நிலவரம் இன்று காலை 6 முதல் அமலுக்கு வந்துள்ளது. 16வது நாளாக விலை மாறாமல் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியை தந்தாலும் திடீரென விலை ஏற்ற அறிவிப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

210 இடங்களில் அதிமுகவின் வெற்றி உறுதி.. பொதுக்குழுவில் அடித்துக் கூறும் இபிஎஸ்
தவெகவில் இணையப்போகிறேனா..? ஷாக் அப்டேட் கொடுத்த வைத்திலிங்கம்- அதிமுக டாக்டர் சரவணன்..!