தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்துக்கு, தகுந்த பதில் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்துக்கு, தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இதனைக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எந்த மதத்தையும் தவறாகப் பேசக் கூடாது என்றும் சனாதன தர்மத்தை யாராவது தவறாகப் பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
undefined
மேலும், இந்தியா - பாரதம் சர்ச்சை குறித்து அங்கீகரிக்கப்பட்ட நபர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராக இருப்பதாவும் பல முறை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சனாதனம் குறித்த பேச்சுக்காக டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதிக்கு ஆதரவாகப் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியக் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளோட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 260க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
பிரதமர் மோடி 9 வருஷமா ஒரு நாள் கூட லீவு எடுக்கலயாம்! உழைத்துக்கொண்டே இருக்கிறாராம்!
இதனிடையே, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி தலையைக் கொண்டுவந்தால் ரூ.10 கோடி தருவதாக திங்கட்கிழமை அறிவித்தார். அதற்கு பதில் சொன்ன உதயநிதி, என் தலையைச் சீவ 10 ரூபாய் போதும். நானே சீவிக்கொள்வேன் என்று நகைச்சுவையாகக் கூறினார்.
திமுகவினர் சார்பில் அயோத்தி சாமியாரைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, அந்த சாமியார் உதயநிதி தலையைக் கொண்டுர 10 கோடி ரூபாய் போதாவிட்டால் இன்னும் பணம் தருவதாகவும், தலை இருந்தால்தானே சீவ முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
உதயநிதி மீண்டும் சனாதனம் பற்றிப் பேசினால், ஆட்சி கலைக்கப்படுமாம்! உதார் விடும் சுப்ரமணியன் சுவாமி
கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும்! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! pic.twitter.com/0MKe3ORPdq
— DMK Updates (@DMK_Updates)
கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும். அதை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டியது." என்று வலியுறுத்தினார்.
அயோத்தி சாமியார் பேச்சு வன்முறையல்ல! மனம் வெதும்பி பேசிவிட்டார்: செல்லூர் ராஜூ