இறுதி வரை இயற்கை விவசாயம்.. பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டி காலமானார் - மத்திய அமைச்சர் எல். முருகன் இரங்கல்!

By Ansgar R  |  First Published Sep 27, 2024, 11:39 PM IST

Padma Shri Pappammal : இயற்கை விவசாய துறையில் பல சாதனைகளை புரிந்ததற்காக மத்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் தான் கோவையை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி.


ரங்கம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட எம். பாப்பம்மாள், கடந்த 1914ம் ஆண்டு தேவராயபுரம் என்று ஊரில் பிறந்தவர். இளம் வயதிலேயே தன்னுடைய பெற்றோரை இழந்த பாப்பம்மாள், தேக்கம்பட்டி என்கின்ற பகுதியில்தான் தனது இரண்டு சகோதரிகளோடு வளர்ந்து வந்தார். கோவையில் தன்னுடைய பாட்டியின் உதவியோடு ஒரு சிறிய உணவகம் ஒன்றை திறந்த பாப்பம்மாள், தொடக்கத்திலேயே தன்னுடைய தொழிலில் நல்ல லாபத்தை பார்த்து வந்துள்ளார். 

அப்போது தான் கோவை அருகே சுமார் 10 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்ய தொடங்கியிருக்கிறார். காலை ஐந்து மணிக்கு எழுந்து தனது வயலுக்கு செல்லும் பாப்பம்மாள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதையே தன்னுடைய சந்ததிக்கும் எடுத்துச் சென்றுள்ளார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தட்டுகளை பயன்படுத்தாமல் வாழை இலையில் மட்டுமே உண்ணும் பழக்கத்தை கொண்டவர் பாப்பம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

undefined

மூட்டை, மூட்டையாக வரப்போகிறது வெங்காயம், தக்காளி.? இனி மார்க்கெட்டில் விலை இவ்வளவு தான்

கடந்த 1959 ஆம் ஆண்டு தக்கம்பட்டி பஞ்சாயத்தில் வார்டு மெம்பராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார். அதற்கடுத்து காரமடை பஞ்சாயத்து யூனியனின் கவுன்சிலராகவும் சில காலம் பதவி வகித்து வந்தார். இவர் அரசியல் கட்சிகளிலும் இணைந்து பயணித்திருக்கிறார். இவருடைய இயற்கை விவசாயத்தை கண்டு வியந்து போன மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய கௌரவித்தது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ‘பத்மஶ்ரீ’ பாப்பம்மாள் பாட்டி அவர்கள், உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.

தனது 109-வது வயதில் இயற்கை எய்தியுள்ள பாட்டி பாப்பம்மாள் அவர்கள், கடைசி காலம் வரைக்கும் வேளாண் துறையின் மீது தான்… pic.twitter.com/9pSEkdLtfO

— Dr.L.Murugan (@Murugan_MoS)

கடந்த சில நாளாகவே உடல்நலம் குன்றியிருந்த பாப்பம்மாள், இன்று செப்டம்பர் மாதம் 27ம் தேதி மாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர் எல் முருகன் வெளியிட்ட பதிவில் "தன்னுடைய கடைசி காலம் வரை வேளாண் துறையின் மீது அன்பு கொண்டிருந்த பாப்பம்மாள் பாட்டியின் மறைவு மிகப்பெரிய சோகத்தை தருகிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 

வெயிலுக்கு குட்பை! மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்! சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?

click me!