
நாமக்கல் மாவட்டம் பெரியமணலியை சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மோகனபிரியா (34) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிரணிதா (6) என்ற மகளும், பிரணித்(2) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை மோகனப்பிரியா (33), மகன் பிரினிராஜ் (2) மற்றும் மகள் பிரினித்தி (6) ஆகியோர் சடலமாக கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வெயில் எப்படி இருக்கும்? வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம்ராஜ் எழுதிய கடிதம் ஒன்றை சிக்கியது. அதில், ஆன்லைன் ஆப்பில் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கடனை எப்படி கட்டுவது என தெரியவில்லை என கூறியிருந்தார். ஆனால், பிரேம்ராஜ் மட்டும் மாயமானது போலீசாரக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. மேலும் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து விசாரணை தீவிரப்படுத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நாமக்கல் தனியார் வங்கியில் பணியாற்றி வந்த பிரேம்ராஜுக்கும், அங்கு பணியாற்றிய நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் வங்கி நிர்வாகத்துக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் பணிநீக்கம் செய்து விட்டனர். மேலும் குடும்பத்தினருக்கு இந்த தகவல் தெரிய வந்ததை அடுத்து பிரேம்ராஜை கண்டித்துள்ளனர். மோகன பிரியாவின் தந்தை ரூ.6 லட்சத்தை தொழில் செய்ய அவருக்கு வழங்கியதாகவும், அந் த பணத்தை சூதாட்டத்தில் அவர் இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவீட்டார் பெற்றோர்களும் சமாதானப்படுத்தி வைத்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் செவ்வாய்க்கிழமை மோகனபிரியா மற்றும் இரு குழந்தைகள் இறந்த நிலையில் வீட்டில் கிடந்தனர். பிரேம்ராஜ் தலைமுறைவானார். இதனிடையே கரூருக்குச் சென்ற பிரேம்ராஜ் அன்று இரவு 10.30 மணியளவில் பசுபதிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அங்குள்ள ரயில்வே போலீசார் அவரை உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் ரூ.50 லட்சம் இழப்பு! தாய், 2 குழந்தைகள் கொலை? தலைமறைவான கணவர்! சிக்கிய கடிதம்!
இதனால், குழந்தைகள், மனைவியை கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு கொன்றாரா? அல்லது அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? தெரியவில்லை. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே மோகனபிரியா மற்றும் குழந்தைகள் எப்படி உயிரிழந்து தெரியவரும். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.