
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளளரும், எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து செங்கோட்டையன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தியூர் பகுதி அதிமுக பிரமுகர் பிரவீன் எங்களுக்கு இந்தக் கூட்டம் குறித்து எந்த ஒரு அழைப்பும் விடுக்கப்படுவது இல்லை கூறியுள்ளார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு எற்பட்டது. இதனையடுத்து செங்கோட்டையன் எது பேசுவதாக இருந்தாலும் மேடைக்கு வந்து பேசுங்கள். அங்கிருந்து பேச வேண்டாம் என்றார்.
இதையும் படிங்க: டேய் மடையா பேசுறத கேளுடா! மேடையில் டென்ஷனாகி தொண்டரை ஒருமையில் திட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!
இதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த பிரவீன் செங்கோட்டையன் மற்றும் செல்வராஜ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் அவர் மீது நாற்காலியை தூக்கி வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அவரை இழுத்து கீழே தள்ளி நாற்காலிகளை எறிந்து கூட்ட அரங்கை விட்டு ஓடினார். ஆனாலும் விடாமல் அதிமுக நிர்வாகிகள் துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பேசிய செங்கோட்டையன்: தற்போது பிரச்சனை செய்தவர் அதிமுக நிர்வாகியே இல்லை. இதற்கு மிக முக்கிய காரணம் அந்தியூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் அவரது ஏற்பாட்டில்தான் இந்த நபர் இங்கு வந்து பிரச்சனை செய்துள்ளார். துரோகிகளுக்கு இறைவன் பெரிய தண்டனை கொடுப்பார்.
இதையும் படிங்க: அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் நடிகை? யார் இவர் தெரியுமா?
அந்தியூரைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணன் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அதிமுக கூட்டத்தில் தாக்கப்பட்ட பிரவீன் அதிமுக உறுப்பினரே இல்லை என செங்கோட்டையன் கூறிய நிலையில் அவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.