பள்ளி முதல் பள்ளிவாசல் வரை.. திமுக ஆட்சியில் பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு.. கொதிக்கும் நயினார்

Published : Nov 22, 2025, 06:56 PM IST
Nainar Nagendran

சுருக்கம்

திமுக ஆட்சியில் பள்ளிக்கூடம் முதல் பள்ளிவாசல் வரை திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு பல் இளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள தர்காவில் அஸ்ரத் ஆக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் அஜீஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புனித நீர் தெளிப்பதற்காகக் குழந்தையுடன் தர்காவிற்கு வந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் குத்தி தாக்கியதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கும் பாதிக்கப்பட்ட அப்பெண் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

படிக்கும் பள்ளி முதல் புனிதமான பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது என்றால் திமுக அரசையும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டம் ஒழுங்கையும் குற்றவாளிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்? அதிலும் அப்துல் அஜீஸ் மீது ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகச் செய்திகள் உலா வரும் நிலையில், அவர் தர்காவின் தலைவராக எப்படி நியமிக்கப்பட்டார்?

மேலும், விருதுநகர் மாவட்டத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்தைப் பற்றி திமுகவின் போலி பெண் போராளிகளும், பிற தலைவர்களும் இதுவரை வாய் திறக்காதது ஏன்? இஸ்லாமிய மக்களின் ஓட்டு வங்கி அடி வாங்கிவிடும் என்ற அச்சமா? அல்லது வழக்கம்போல இந்தப் பாலியல் வழக்கிலும் உடன்பிறப்புகள் ஒளிந்துள்ளனரா?

சமூகநீதி, மத நல்லிணக்கம் குறித்தெல்லாம் பிறருக்கு வகுப்பெடுக்கும் திமுக அரசு, இந்த விவகாரத்தை எவ்வித சமரசமுமின்றி அணுக வேண்டும் எனவும், குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டுமெனவும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு
தகுதி இருந்தாலும் இவர்களுக்கு ரூ.1000 கிடையாது.. மகளிர் உரிமைத்தொகை குறித்து தமிழக அரசு அதிர்ச்சி தகவல்