நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இன்று அவர் ஒருவர் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், நாளை ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.
Nainar Nagendran set to take over as the Tamil Nadu BJP president: பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜகவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். நாளை அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்ப போவதாக தகவல் பரவியது. இதை அண்ணாமலையும் உறுதிப்படுத்தி இருந்தார்.
பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்
இதனால் அடுத்த பாஜக தலைவர் யார்? என்ற கேள்வி இருந்து வந்தது. புதிய தலைவர் ரேஸில் நயினார் நாகேந்திரன் முதன்மையானதாக இருந்து வந்தார். மேலும் தமிழிசை சௌந்தரராஜன், ஆனந்தன் அய்யாசாமி, வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், சரத்குமார் ஆகியோரும் புதிய தலைவர் ரேஸில் இருந்து வந்தனர். இதற்கிடையே தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள், இன்று (ஏப்ரல் 11) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
விருப்ப மனு தாக்கல்
இந்த நிலையில் இன்று தமிழக மாநில தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற விருப்ப மனு தாக்கலின்போது நயினார் நாகேந்திரன் மட்டும் தாக்கல் செய்துள்ளார். விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று மாலை 4 மணி அவகாசம் அளித்திருந்த நிலையில், நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், அண்ணாமலை, வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா ஆகியோரும் அவரது பெயரை முன்மொழிந்தனர்.
நாளை போட்டியின்றி தேர்வு
நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால் அவர் தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு பாஜக உறுப்பினராக 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் 2017ல் பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரன் 8 ஆண்டுகளை மட்டுமே நிறைவு செய்திருக்கும் நிலையில், அவருக்காக பாஜகவின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5 பேரை தாண்டி நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவது எப்படி? பின்னணி காரணம் இதுதான்!
நாளை பதவியேற்பு?
இந்நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (ஏப்ரல் 12) நடைபெற உள்ள விழாவில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுக டூ பாஜக.! மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்- யார் இவர்.?