
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்
உலக புகழ்பெற்ற கோவில் மட்டுமல்லாமல் நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை! லிஸ்ட்ல சென்னை இருக்கா?
மகர கண்டி தங்க ஆபரணம்
இந்நிலையில் திருவண்ணாமலை மாநகரில் குமரகோவில் தெருவை சேர்ந்த குமார். இவர் திருவண்ணாமலை சண்முகா விண்ணுலப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது குடும்பத்தினர்கள் 750 கிராமில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தினால் ஆன மகரகண்டி என்று அழைக்கக்கூடிய பல்வேறு கெம்புக்கல், பச்சைக்கல், வைரக்கல், மரகத பச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட தங்க மாலையை இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து பின்னர் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனியிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தொண்டையில் சிக்கிய உயிர் மீன்! துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்! நடந்தது என்ன?
50 லட்சம் மதிப்பிலான நகை
இந்த நகைகள் அனைத்தும் திருவண்ணாமலை அண்ணாமலையார் வீதி உலா வரும்போது அண்ணாமலையாரின் திருமேனியை மேலும் அழகு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 50 லட்சம் மதிப்பிலான நகையினை கோவிலுக்கு வழங்கிய பக்தரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.