ஆளுநர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்; வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

Published : Dec 18, 2022, 11:08 AM IST
ஆளுநர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்; வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

சுருக்கம்

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள சிறப்பு விருந்தினர்கள் தங்கும் விடுதி அருகே மர்ம பொருள் ஒன்று எரிந்த நிலையில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிறப்பு விருந்தினர்கள் தங்குவதற்காக கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் அருகில் நேற்று மர்ம பொருள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகரக் காவல் துறையினருக்கு இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

பெண்ணின் வறுமையை கேட்டு திருடிய நகையை திரும்ப கொடுத்த உத்தம திருடன்

புகாரின் அடிப்படையில் ஆளுநர் மாளிகைக்கு விரைந்த காவல் துறையினர் மர்ம பொருள் டிரோன் வடிவில் இருந்ததால் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்தனர். பின்னர் அது வானியை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் பலூன் என்றும், காலை, மாலை நேரங்களில் வானில் பறக்க விடப்படக் கூடியது என்றும் கண்டறியப்பட்டது.

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்

இருப்பினும் காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆளுநர் மாளிகை முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆளுநர் மாளிகையில் கூடுதல் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!