கன்னியாகுமரி டூ சென்னை.. முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி.. இன்று முதல் தொடங்கியது..!

எழுத்தாளர்-கலைஞர் குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத்திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.


கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்திலிருந்து இன்று தொடங்கி 29 மாவட்டங்கள் வழியாக டிசம்பர் 4ம் தேதி சென்னை செல்கிறது. 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில், எழுத்தாளர்-கலைஞர் குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத்திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிப்போச்சு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி 04.11.2023 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இவ்விழாவில், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்புக்கவுள்ளார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் முத்தமிழ்த்தேர் என்ற அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் 04.11.2023 அன்று முக்கோணப்பூங்கா, பழத்தோட்டம், ஜீரோ பாய்ண்ட் ஆகிய இடங்களிலிலும், 05:11.2023 அன்று முதல் 05:12.2023 வரை கீழ்கண்ட நாட்களில் அந்தந்த மாவட்டங்களிலும் காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் 4ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 5ம் தேதி திருநெல்வேலி, 6ம் தேதி தூத்துக்குடி, 7ம் தேதி விருதுநகர், 8ம் தேதி , 9, 10 தேதிகளில் மதுரை, 11ம் தேதி ராமநாதபுரம், 12 தீபாவளி விடுமுறை, 13ல் புதுக்கோட்டை, 14ல் சிவகங்கை, 15ல் நாகப்பட்டினம் செல்கிறது. 16ம் தேதி மயிலாடுதுறை, 17ம் தேதி திருவாரூர், 18ம் தேதி தஞ்சாவூர், 19ல் திருச்சி, 20ல் திண்டுக்கல், 21ல் கோவை, 22ல் திருப்பூர், 23ல் ஈரோடு, 24ல் கரூர், 25ம் தேதி நாமக்கல், 26ம் தேதி சேலம் செல்லும். 27 தருமபுரி, 28ம் தேதி கிருஷ்ணகிரி, 29ல் திருப்பத்தூர், 30ம் தேதி திருவண்ணாமலை, டிசம்பர் 1ம் தேதி விழுப்புரம், 2ம் தேதி செங்கல்பட்டு, டிசம்பர் 3 காஞ்சிபுரம் சென்று டிசம்பர் 4ம் தேதி சென்னை சென்றடைகிறது.

இதையும் படிங்க;- திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தீபாவளி பரிசு!

எனவே, தங்கள் மாவட்டங்களில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகையின் போது பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளம் தலைமுறையினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

click me!