Walk for Health : தமிழகத்தில் மக்களிடையே நடை பயிற்சி பழக்கத்தை அதிகரிக்க ஒரு சிறப்பு திட்டமாக "Walk For Health" என்ற நிகழ்வை இன்று காலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
ஜப்பானிய மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்காக அந்நாட்டு அரசு ஹெல்த் வாக் சாலைகள் என்கின்ற பிரத்தியேக சாலைகளை உருவாக்கியுள்ளன. சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில் மக்கள் தினம்தோறும் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். பொதுவாக ஒரு வளர்ந்த மனிதர், ஒரு நாளைக்கு சுமார் 10,000 அடிகள் நடந்தால் அவர்களுக்கு வருகின்ற பெருவாரியான வியாதிகள் குறையும் என்று மருத்துவ ரீதியாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் பத்தாயிரம் அடிகள் என்பது சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவாகும், ஜப்பானின் முக்கிய இடங்களில் மக்கள் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் இந்த முறையை அமல்படுத்தி மக்கள் நடை பயிற்சி செய்வதை ஊக்குவிக்க Walk For Health சிறப்பு திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் இன்று காலை இந்த நடை பயிற்சியை மேற்கொண்டனர். அவர்களுடைய இந்த நடைபயணமாது அடையாறு எஸ்பி சாலை மேம்பாலம் அருகில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி பூங்காவிலிருந்து துவங்கியது.
பின் இறுதியாக எலியட்ஸ் கடற்கரையை அடைகிறது, மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வேளாங்கண்ணி சாலையில் வலது பக்கமாக நடைப்பயணம் திரும்பி, துவங்கிய இடத்திற்கே இந்த நடை பயணம் வந்து முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இந்த ஹெல்த் வாக் திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரத்தியேக சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நடைப்பயிற்சி செய்ய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D