கட்டட முடிவு சான்று இல்லாமலே மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் வசதி, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை பெறலாம் என நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
கட்டட முடிவு சான்று
நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க கட்டட முடிவு சான்று தேவையென உத்தரவு உள்ளது. இதன் காரணமாக மின் இணைப்பு கிடைக்கபெறாததால் பொதுமக்கள் கட்டிடம் கட்டும் போது பாதிக்கப்படும் சூழல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. மேலும் குடிநீர் வசதியும், பாதாள சாக்கடை இணைவு வசதி பெறவும் கட்ட முடிவு சான்று தேவை என்ற நிலை உள்ளதால் அந்த முடிவு மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து புதிய உத்தரவை நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.
முடிவு சான்று அவசியமில்லை
அதில், அனைத்து வீடுகள், தொழிற்சாலை கட்டடங்கள் அனைத்திற்கும் மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் வசதி, பாதாள சாக்கடை இணைப்பு வசதி பெற கட்டட முடிவு சான்று கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவை அமல்படுத்துவதால் இனி கட்டட முடிவு சான்று இல்லாமலே மின் இணைப்பு வசதியும் பெறலாம் என மின்சார வாரியமும் புதிய உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்