தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல், உடல்நிலையை காரணம் காட்டி மெடிக்கல் லீவ் எடுத்து வருகின்றனர்.
பள்ளிக்கு நீண்ட காலமாக வராத, நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல், உடல்நிலையை காரணம் காட்டி மெடிக்கல் லீவ் எடுத்து வருகின்றனர். பள்ளிக்கு போனாலும், போகவில்லை என்றாலும் நமக்கு முழு சம்பளம் வந்துவிடும் என்பதால் ஆசிரியர்கள் இதுபோன்ற ஒழுங்கினத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறைக்கு அடிக்கடி புகார் சென்றுள்ளது. ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பததால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க;- இனி தாம்பரம் வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் - போக்குவரத்து கழகம் திடீர் உத்தரவு
undefined
இந்நிலையில், தொடர்ந்து விடுமுறையில் உள்ள அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் ஆகியோரின் விவரங்களை உடனே அனுப்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்;- தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்கள் கோரப்படுகிறது.
* நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள்
* நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள்
* தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள்.(அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள்).
மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இணையவழி (deesections@gmail.com) மூலம் உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலமாக விடுப்பில் இருப்பது தெரியவந்துள்ளதால் தொடக்கக்கல்வி இயக்ககம் ஆசிரியர்களின் விவரங்களை கேட்டுள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் இன்று மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!