ரூ.230 கோடி செலவில் சைதாப்பேட்டையில் பன்நோக்கு மருத்துவமனை... மா.சுப்ரமணியன் சூப்பர் தகவல்!!

By Narendran SFirst Published Oct 3, 2022, 12:01 AM IST
Highlights

சென்னை சைதாப்பேட்டையில் 230 கோடி ரூபாய் செலவில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் 230 கோடி ரூபாய் செலவில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையானது, இந்தியாவின் இரண்டாவது முதியவர்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பயங்கர சத்தத்துடன் வெடித்த ஹீலியம் சிலிண்டர்... தூக்கி வீசப்பட்ட பலூன் வியாபாரி... அடுத்து நிகழ்ந்தது என்ன?

மேலும் 230 கோடி ரூபாய் செலவிலான பன்நோக்கு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் அமைய உள்ளது.  40 கோடி ரூபாய் செலவில் காந்தி மண்டபத்தை புதுப்பிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். எல்லோரும் மகிழக்கூடிய கூடிய வகையில், முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சோழ மன்னர்களோட பேரு வச்சுருக்கீங்களா? அப்போ உங்களுக்கு பிரியாணி இலவசம்... எங்க தெரியுமா?

இதைத்தொடர்ந்து சென்னை ஜாஃபர்கான் பேட்டையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணி கலந்துக்கொண்டார். இதில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவும் கலந்துக்கொண்டு அண்ணா, கலைஞர் ஆகியோர் வரிசையில், காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருப்பது, பாராட்டுதலுக்குரிய சாதனை என்று புகழாரம் சூட்டினார். 

click me!