சோழ மன்னர்களோட பேரு வச்சுருக்கீங்களா? அப்போ உங்களுக்கு பிரியாணி இலவசம்... எங்க தெரியுமா?

By Narendran S  |  First Published Oct 2, 2022, 9:23 PM IST

திருச்சி மற்றும் சென்னையில் இயங்கி வரும் பிரியாணி கடை ஒன்றில் சோழ மன்னர்களின் பெயர் வைத்திருப்பவர்களுக்கு பிரியாணி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


திருச்சி மற்றும் சென்னையில் இயங்கி வரும் பிரியாணி கடை ஒன்றில் சோழ மன்னர்களின் பெயர் வைத்திருப்பவர்களுக்கு பிரியாணி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இது திரையரங்குகளில் தற்போது வெற்றிநடைபோட்டு வருகிறது. மக்கள் பலரும் இந்த படத்திற்கு பாரட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கணவன் கண்முன்னே மனைவியிடம் சில்மிஷம் செய்த காவல்துறை அதிகாரி.. இதுதான் சட்டம் ஒழுங்கா? வைரல் வீடியோ!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் திருச்சியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் சோழ மன்னர்களின் பெயர் வைத்திருப்பவர்களுக்கு பிரியாணி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்த ஹக்கீம் பிரியாணி கடையின் அறிவிப்பில், சோழ மன்னர்களின் பெயர்களான சுந்தரச்சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்ய கரிகாலன், வந்நியத் தேவன், குந்தவை, பூங்குழலி ஆகிய பெயர்களை கொண்டவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி கவுரவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “விடுபட்டவர்களுக்கு மீண்டும் முதியோர் தொகை கிடைக்கும்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!”

அதன்படி சோழ மன்னர்களின் பெயர்களை கொண்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஹக்கீம் பிரியாணி கடை திருச்சி மற்றும் சென்னையில் இயங்கி வருகிறது. மேலும் இதன் உரிமையாளாரன திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம் தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் முக்கியப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!