மகாபலிபுரத்தை சுற்றிப்பார்த்த முதல்வரை சுற்றி சுற்றி பார்த்த பொதுமக்கள்

Published : Dec 31, 2022, 03:15 PM ISTUpdated : Dec 31, 2022, 03:16 PM IST
மகாபலிபுரத்தை சுற்றிப்பார்த்த முதல்வரை சுற்றி சுற்றி பார்த்த பொதுமக்கள்

சுருக்கம்

சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தை பொதுமக்களுடன் சேர்ந்து சுற்றிப் பார்த்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் நேற்று மாலை மகாபலிபுரம் கடற்கரை கோவிலை சுற்றிப் பார்ப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். பின்னர் அவரக்கு தமிழக சுற்றுலாத்துறை சார்பில் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மகாபலிபுரத்தின் சிறப்புகளை விளக்கும் புத்தகம் ஒன்று அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. முதல்வருக்கு தமிழக அரசு சார்பில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

இதனைத் தொடர்ந்து முதல்வர் சிவராஜ்சிங் கோவிலுக்குள் செல்ல முற்பட்டார். அப்போது அவருடன் இணைந்து பாதுகாப்பு அதிகாரிகளும் செல்ல முயன்றனர். அதிகாரிகளை அருகில் அழைத்த முதல்வர் சிவராஜ்சிங் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களை தொந்தரவு செய்யாதீர்கள். நான் மக்களுடன் இணைந்து சிற்பங்களை சுற்றிப்பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர்.

முதல்வருடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மகாபலிபுரத்தின் சிறப்புகள் குறித்து தமிழக சுற்றுலாத்துறை சார்பில் விளக்கி கூறப்பட்டது. மேலும் கடற்கரை பரப்பில் இப்படிப்பட்ட கோவில் எப்படி அமைக்கப்பட்டது, உப்புக் காற்றிலும் கோவில் சேதமடையாமல் எப்படி பராமரிக்கப்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

காதலனுடன் ஊர் சுற்றுவதற்காக தாயிடம் கடத்தல் நாடகம்; தலையில் தட்டி அனுப்பிய காவல்துறை

அப்போது அங்கு சுற்றுலா வந்த மத்திய பிரதேச மக்கள் தங்கள் மாநில முதல்வரை பார்த்ததும் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினர். பொதுமக்களின் எண்ணத்தை அறிந்த முதல்வர் அவர்களை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மாநில முதல்வர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் மேற்கொள்ளாமல், மக்களை தொந்தரவு செய்யாமல் மக்களுடன் ஒருவராக கோவிலை சுற்றிப் பார்த்த சிவராஜ்சிங் சவுகானை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பாராட்டினர்.

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!