மதுரை அருகே சாலை விபத்து... 2 போலீசார்கள் பலி... அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு!

Published : Dec 10, 2018, 04:51 PM IST
மதுரை அருகே சாலை விபத்து... 2 போலீசார்கள் பலி... அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு!

சுருக்கம்

மதுரை அருகே தடுப்புச்சுவரில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 ஆயுதப்படை காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 27). அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ் (28). இந்த இருவரும் சென்னையில் ஆயுதப்படை காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். நண்பரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர். 

நேற்று 2 பேரும் இருசக்கர வாகனத்தில் மதுரை சென்று திருமண விழாவில் பங்கேற்றனர். பின்னர் திருமணத்தை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதியது. மேலும் காரின் மீதும் மோதியுள்ளது. 

இந்த விபத்தில் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தினேஷ், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். தனது மகன் ராஜபாண்டி விபத்து சிக்கியதை அறிந்த தயார் அதிர்ச்சியில்  மாரடைப்பு ஏற்பட்டு இறநதார். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்