ஜாக்டோ-ஜியோ ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Published : Dec 03, 2018, 02:05 PM IST
ஜாக்டோ-ஜியோ ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சுருக்கம்

நாளை முதல் நடைபெறவிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் நடைபெறவிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் யோசனையை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். 

முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இந்நிலையில் மதுரை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 அந்த மனுவில் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது. அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ ஜியோ போராட்டத்தை வரும் 10-ஆம் தேதி வரை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிபதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Thiruparankundram Deepam controversy: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை: வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகாதீபம்!
Famous Madurai Food: ஜிகர்தண்டா முதல் மட்டன் சுக்கா வரை! மதுரையை ஒரு பிடி பிடிக்கும் 5 உணவுகள்!