MeToo' சர்ச்சைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த கவிஞர் வைரமுத்து சற்றுமுன்னர் திடீர் உடல்நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
MeToo' சர்ச்சைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த கவிஞர் வைரமுத்து சற்றுமுன்னர் திடீர் உடல்நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார். உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவர் ஐ.சி.யு.பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார்.
கடந்த சில வாரங்களாகவே, பாடகி சின்மயி தொடங்கி சுமார் 11 பேர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிவந்த நிலையில், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தவர், சென்னையை விட்டு மதுரைக்குச் சென்றாலாவது சிறிது ஆசுவாசமாக இருக்குமே அங்கு பசுமலை வளர்நகரிலுள்ள தனது நெருங்கிய நண்பர் வீட்டுக்குச்சென்று தங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று மதிய உணவை முடித்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பித்த கவிஞர் சிறிது நேரத்திலேயே உடல்நலக்குறைவால் அவதியுற ஆரம்பித்தார். உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் வைரமுத்துவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது என்று கூறி உடனே ஐ.சி.யு.வில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கவிஞரின் உடல்நலக்குறைவு உடனே அவரது சொந்த ஊரான வடுகபட்டிக்கு பரவவே அவரது உறவினர்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.