தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அப்டேட்

By Thanalakshmi V  |  First Published Oct 3, 2022, 2:06 PM IST

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 


இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மத்திய மேற்கு வங்கக்கடலில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,

03.10.2022 மற்றும்‌ 04.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

Tap to resize

Latest Videos

05.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

06.10.2022 மற்றும்‌ 07.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:அடுத்த கல்வியாண்டிற்கான TANCET நுழைவுத் தேர்வு எப்போது தெரியுமா..? அறிவிப்பு வெளியானது

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌
இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

03.10.2022 மற்றும்‌ 04.10.2022: லட்சதீவு பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌
வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

05.10.2022 மற்றும்‌ 06.10.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்.. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை.. வானிலை மையம்

click me!