ஹாப்பி நியூஸ் !! ஆயுத பூஜையொட்டி நாளை வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்.. நிர்வாகம் அறிவிப்பு

Published : Oct 03, 2022, 01:07 PM IST
ஹாப்பி நியூஸ் !! ஆயுத பூஜையொட்டி நாளை வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்.. நிர்வாகம் அறிவிப்பு

சுருக்கம்

ஆயுதபூஜை விடுமுறையொட்டி வண்டலூர் பூங்கா நாளை திறந்திருக்கும் என்றும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.   

ஆயுதபூஜை விடுமுறையொட்டி வண்டலூர் பூங்கா நாளை திறந்திருக்கும் என்றும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பராமரிப்பு பணி காரணமாக மூடப்படும். 

மேலும் படிக்க:அண்ணா சாலையில் பைக் சாகசம் செய்த யூடியூப் பிரபலம்.. அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வைத்த நீதிமன்றம்

ஆனால் நாளை ஆயுத பூஜை விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் அதிகளவில் வருகை தருவர். இதனை கருத்தில் கொண்டு நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க:இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்.. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை.. வானிலை மையம்

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 16 January 2026: தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்
சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!