அடுத்த கல்வியாண்டிற்கான TANCET நுழைவுத் தேர்வு எப்போது தெரியுமா..? அறிவிப்பு வெளியானது

By Thanalakshmi VFirst Published Oct 3, 2022, 1:44 PM IST
Highlights

அடுத்த கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவு தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அடுத்த கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவு தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு டான்செட் நுழைத்தேர்வு மூலம்  மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கான டான்செட் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்.25, 26 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறுகிறது.   பிப்ரவரி 25 ஆம் தேதி காலை எம்.சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும். அதேநாள் மதியம் எம்டெக், எம்.இ, எம்.ஆர்க், எம்பிளான் படிப்புகளுகான நுழைவு தேர்வு நடைபெறுகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி எம்பிஏ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. 

மேலும் படிக்க:வீட்டில் இருந்து நடந்தே வந்திருக்கலாம்..! காமராஜருக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தாதது ஏன்..? பாஜக கேள்வி

இதுக்குறித்த கூடுதல் விவரங்களை www.annauniv.edu என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அடுத்த ஆண்டும் ஏப்ரல் அல்லது மார்ச் மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இதில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்துக் கொள்ளலாம். 

மேலும் படிக்க:காலேஜ் கேல்ஸ் முன்னாள் கெத்து காட்ட நினைத்து பொத்துன்னு தலைகுப்புற விழுந்த இளைஞர்.. 3 பேர் மீது போலீஸ் ஆக்‌ஷன்

இதே போல் பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவு தேர்விற்கு மாணவர்கள் நாளை வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிவடைந்த மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 2023-24 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஜனவரி 3ஆம் தேதி முதல் தேர்வர்கள் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!