MNM Leader Kamal : மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை துவங்கினர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்.
அப்போது பேசிய அவர்.. ஈரோட்டில் என் பிரச்சாரத்தை தொடங்க இரண்டு காரணம், ஒன்று பெரியார் பெயரை சொன்னால் தமிழகத்தின் சரித்திரம் 80சதவீதம் சொன்னப்படி அர்த்தம். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை வெற்றி பெற செய்யப்போவது இரண்டாவது காரணம். மதிய உணவு திட்டம் காமராஜர் தொடங்கி, எம்ஜிஆர் மற்றும் அதன் நீட்சியாக முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்
தமிழகத்தில் கூலி வேலை முதல் பல வேலைக்கு வடமாநிலங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள். அதன் அர்த்தம் அங்கே வேலை இல்லை. ஏன் என்றால் நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29பைசா தான் வருகிறது. ஆனால் அங்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 7ரூபாய் கிடைக்கிறது, ஆனால் அங்கிருந்து கூலி வேலைக்கு தமிழகத்திற்கு வருகிறார்கள்.
வடமாநிலங்களில் கட்டபொம்மன், வஉசி சிதம்பரம், காமராஜர் பெயர் உள்ளதா? ஆனால் தமிழகத்தில் காந்தி, பட்டேல் என்று சொன்னால் தெரியும். பட்டேல் சிலை தமிழகத்தில் எழுப்பி நீண்ட வருடங்கள் ஆகிறது
தமிழன் தேசிய நீர் ஓட்டத்தில் கலக்க மாட்டான் என்பது பொய். எங்கள் பெயரை கேட்டாலே தெரியும் இங்கு திமுக அமைச்சர் பெயர் நேரு.
எப்படியாவது நாட்டை பிடிக்க வேண்டும் என்பது வெறி, நாட்டை காக்க வேண்டும் என்பது வீரம். பத்திரிக்கையாளரை சந்திக்காமல் இருப்பவரிடம் வீரத்தை பற்றி பேசினால் புரியமா? எதையும் பளிச்சென்று போட்டு உடைக்க வேண்டும் என்று பெரியார் சொல்லி தந்தது. ஆங்கிலேயர்கள் கிழக்கு இந்திய கம்பெனி மூலம் நாட்டை சுரண்டல் செய்து சென்ற போது அவர்களை விரட்டி விட்டோம் என்று நினைத்தோம்.
ஆனால் அதை மாற்றி மேற்கு இந்தியாவில் இருந்து தற்போது கம்பெனி வந்துள்ளது. அது காந்தியார் பிறந்த ஊரில் இருந்து வந்துள்ளது. விவசாயம் விஞ்ஞானத்தில் பயன்படுத்தும் நிலையில், இந்தி திணிப்பு நான் சிறுவயதில் இருந்தபோதே ஒழித்து விட்டார்கள் என்று நினைத்தேன், ஆனால் இந்தியை திணித்தால் நடப்பது வேறு.
1952ம் ஆண்டு இந்தியாவில் 22மொழிக்கும் இடம் உண்டு என்று கொடுத்த சத்தியம் என்னாச்சு, மாணவர்கள் எழுத முடியாத அளவில் தேர்வு கொண்டு வந்து இந்தி திணிப்பு செய்கிறது. உலக முழுவதும் பெட்ரோல் விலை குறையும் போது, இந்திய மக்களுக்கு லாபத்திற்காக விற்பனை செய்த அரசின் ஆட்சி நடக்கின்றது.
ஆபத்து காலத்தில் கூட (பேரிடர் போது) உதவியை மறுக்கும் ஒன்றிய அரசை, ஒன்றிய அரசு என்று சொன்னால் அவர்களுக்கு கோபம் வருகிறது.
ஆகவே உங்கள் குரல் பாராளுமன்றத்தில் கேட்க வேட்பாளர் பிரகாஷை அனுப்பி வைக்க வேண்டும். மணிப்பூரில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள், அங்கு உள்ளது தமிழகத்தின் சகோதரிகள் தான். நான் அங்கு செல்ல எனக்கு அனுமதி இல்லை. கருப்பு பணம் இல்லாமல் செய்வேன், என்று வடை சுட்டார்கள், ஆரம்பத்தில் அந்த வடையை நானே நம்பி விட்டேன்.
திமுக ஏழைகளுக்கான அரசு என்பதை உணர்கிறேன் அது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இதற்கு முன்பு விமர்சனம் வைத்தேன். கவர்னர் மூலம் இந்த ஆட்சி மீது கை வைக்கிறார்கள், இந்தி திணித்து மொழி மீது கை வைக்கிறார்கள், 29பைசா மட்டுமே தந்து அடி வயிற்றில் கை வைக்கிறார்கள்.
நம் மீது கை வைப்பவர்கள் மீது கை வைக்க ஒரு விரல் போதும், கை வைத்தால் மை வைப்போம். அதை இந்த தொகுதியில் இருந்து தொடங்குங்கள். 66ம் ஆண்டு காலமாக மக்கள் மனதில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன் எனக்கு இதை செய்த மக்களுக்கு நல்லது செய்ய மக்கள் நீதி மய்யத்தினை தொடங்கினோம். முதல்வர் நிலையாக செய்திருப்பதை வரவேற்று இன்னும் செய்ய வேண்டும் என்று கேட்கும் உரிமையை நமக்கு தந்து இருக்கிறார்கள் என்றார் கமல்ஹாசன்.
Edappadi Palaniswami : "கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் திணறிய திமுக" - காஞ்சிபுரத்தில் பேசிய EPS!