Edappadi Palaniswami : "கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் திணறிய திமுக" - காஞ்சிபுரத்தில் பேசிய EPS!

By Ansgar R  |  First Published Mar 29, 2024, 11:36 PM IST

EPS Election Campaign : காஞ்சிபுரத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது பேசிய அவர்.. கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் திமுக திணறியது. வேட்புமனு தாக்கல் நிறைவுக்கு ஒரு நாள் முன்பு தான், காங்கிரஸால் வேட்பாளரையே அறிவிக்க முடிந்தது. ஆனால் அதிமுக முதலிலேயே வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. நெசவு தொழில் இன்று படுபாதாளத்திற்கு போய்விட்டது. வேளாண்மை தொழிலில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அடிப்பை விலை நிர்ணயிக்கவில்லை. 

தொழிற்சாலைகள் இன்று இயங்குவது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலை மாற அதிமுக வெற்றிபெற வேண்டும். இன்று பாஜக கூட்டணியில் இருந்து நாம் விலகிவிட்ட பின்னரும், நாம் பாஜக உடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கூறுகிறார்கள். எங்களுக்கு அந்த அவசியம் இல்லை. 

Latest Videos

undefined

AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

உங்களுக்கு தான் அந்த பழக்கம் உள்ளது. அப்பாவுக்கும், மகனுக்கும் தோல்வி பயம் வந்துவிட்டதால் உளறி வருகிறார்கள். ஒரு சாதாரண தொண்டன் எந்தக் கட்சியிலாவது பொதுச்செயலாளர் ஆக முடியுமா? முதல்வர் ஆக முடியுமா? உனக்கு தில் இருந்தா என் குடும்பத்தை தாண்டிய ஒருவர் முதல்வராவார் என சொல்லு. இரண்டரை ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். 

ஆட்சி முடிவதற்குள் இன்னொரு 3 லட்சம் கோடி கடன் வாங்கி, அதை மக்களின் தலையில் கட்டிவிடுவார். இதற்கெல்லாம் நாம் தான் வட்டி கட்ட வேண்டியதாக இருக்கும். இதற்கு இந்தத் தேர்தலில் முடிவுகட்டுங்கள். தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா சர்வசாதாரணமாக கிடைக்கிறது. திமுக கட்சியை சேர்ந்த அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக், 2000 கோடி மதிப்பிலான வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியுள்ளார். இப்போது கைதாகி சிறையில் உள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி க்ளீனிக் தொடங்கினோம். அந்தத் திட்டத்தை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அரசு தான் திமுக அரசு. ஏழை, எளிய மக்களுக்கு உதவுவது தவறா? அம்மா மினி க்ளீனிக் திட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள்?. தமிழகத்தில் 90% முதியோர்களுக்கு நாங்கள் முதியோர் உதவித் தொகையை வழங்கி வந்தோம். 

இப்போது அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். ஏழை எளிய குடும்பப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டுவந்தோம். அதையும் திமுக அரசு ரத்து செய்துவிட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத 520 அறிவிப்புகளை வெளியிட்டு, ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் தான் ஸ்டாலின். இன்று எத்தனை அறிவிப்புகளை நிறைவேற்றியுள்ளார்? எல்லா மகளிருக்கும் உதவித்தொகை கொடுப்பேன் என்றார், கொடுத்தாரா?. 

அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு கொரோனா வந்த நேரத்தில் கூட, விலைவாசி உயர்வு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது அதிமுக அரசு. ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளில் பொருட்களை இலவசமாக கொடுத்தோம். ரேஷன் அட்டைக்கு ரூ.1000 கொடுத்தோம். விவசாயம் செழிக்க நீர் மேலாண்மை முக்கியம். அதற்காக குடிமராமத்து திட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்தது. கிட்டத்தட்ட 8 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டன. விவசாயிகள் ஒத்துழைப்போடு இத்திட்டத்தை கொண்டுவந்தோம். விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு தெரியுமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

MP Kanimozhi : "தேர்தல் பத்திரங்கள்.. சட்டப்படி ஊழல் செய்யும் பாஜக" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!

click me!