முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மநீம தலைவர் கமல்ஹாசன்? ராஜ்யசபா சீட்டா? அவரே சொன்ன தகவல்!

Published : Apr 16, 2025, 06:23 PM ISTUpdated : Apr 16, 2025, 06:24 PM IST
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மநீம தலைவர் கமல்ஹாசன்? ராஜ்யசபா சீட்டா? அவரே சொன்ன தகவல்!

சுருக்கம்

Kamal Haasan Meet CM Stalin:முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல் 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம், மாநில சுயாட்சி தொடர்பாக நேற்று முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வரை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இது மட்டும் நடந்துச்சுன்னா! 2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது! ஆர்.எஸ்.பாரதி!

ராஜ்யசபா சீட்

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: ராஜ்யசபா சீட்டுக்கு நன்றி சொல்ல வந்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு வரவில்லை. ராஜ்யசபா எம்.பி.யார் என்று கட்சியில் முடிவு செய்த பிறகு அப்பொழுது நன்றி சொல்ல வருவோம்.  இப்போது நன்றி சொல்ல அல்ல கொண்டாட வந்தோம்..

இந்தியாவிற்கே சாதகமான ஒரு தீர்ப்பு

ஆளுநர் விஷயத்தில் வந்த தீர்ப்பு நமக்கு சாதகமான தீர்ப்பு என்று சொல்வதை விட இந்தியாவிற்கே சாதகமான ஒரு தீர்ப்பை தமிழக அரசு போட்ட வழக்கினால் வந்திருப்பது என்பது கொண்டாடப்பட வேண்டியது. அந்த கொண்டாடத்திற்கு வந்தேன் அதுல என்ன உதவி பண்ண வேண்டும் என்றாலும் பண்ணுவோம்.

தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசவில்லை

தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து கேட்கையில் தேர்தலுக்கு ஓராண்டு முன்பு அவசர பட வேண்டியதில்லை. அதிமுக பாஜக கூட்டணி பற்றி நீங்கள் பேசுங்கள் நிறைய பேசுங்கள் என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
சென்னையில் அதிர்ச்சி! ஸ்கேன் எடுக்க சென்ற 48 வயது பெண்! கண்ட இடத்தில் கை வைத்த 28 வயது இளைஞர்!