
‘ஜாட்’ என்ற இந்தித் திரைப்படம், தமிழ் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்களைப் பற்றி இழிவாக காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியினர் கோவையில் உள்ள ஒரு முக்கியமான தியேட்டரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாட் படத்துக்கு எதிர்ப்பு
கோவை கணபதி பகுதியில் அமைந்துள்ள ப்ரோசோன் மால் திரையரங்கில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் தமிழர்களை அவமதிக்கும் வகையில் திரைக்காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த மாலுக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.
நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுமந்து வெளியேற்றும் நிகழ்வுகள் அங்கு நேரில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினர் ஜாட் திரைப்படம் திரையிடப்படுவதை தொடர்ந்து செய்தால், திரையரங்குகளுக்கு தீவிர எதிர்வினை ஏற்படும் எனவும், திரை கிழிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் திரையரங்கு நிர்வாகத்திற்கும், பொது மக்களுக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சில ஷோக்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் பங்க்கில் இத்தனை இலவச வசதிகள் இருக்கா? மறக்காம நோட் பண்ணுங்க!
7 பங்குகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆகுங்கள்! இல்லைனா வருத்தப்படுவீங்க!