இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருகிற 19ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் செப்டம்பர் மாதம் மும்பையிலும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 6ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அழைப்பு விடுத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
undefined
இதையடுத்து, இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருகிற 19ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி: வீண் விரயமா ரூ.30 கோடி?
முன்னதாக, மத்தியப்பிரதேச தேர்தலின்போது, காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளிடையே உரசல் ஏற்பட்டது. தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் காரணமாக அக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அகிலேஷுக்கும் காங்கிரஸுகும் இடையேயான உரசல் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.