அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவந்த இளைஞரை திருச்சி மாவட்ட காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 23). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து அதனை பதிவிட்டு வந்தார். மேலும் வெள்ளிக் கிழமை காலை எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் கையில் அரிவாளுடன் முகேஷ் நின்று கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முகேஷ் அரிவாளுடன் சுற்றி திரிவதாகவும் திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று பார்த்த போது முகேஷ் அப்பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் இது போன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் துறையின் சமூக வலைதளங்கள் கண்காணிப்பு குழு எப்போதும் இதனை கண்காணிப்பார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.