#Breaking | கலப்பு திருமண சான்று கேட்டு வழக்கு… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… ஆடிப்போன மனுதாரர்!!

By Narendran SFirst Published Nov 25, 2021, 2:42 PM IST
Highlights

கலப்பு திருமண சான்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது  என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கலப்பு திருமண சான்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது  என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கிறிஸ்தவ ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் இனத்தை சேர்ந்த அமுதா என்பவரை  திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், கலப்பு திருமண சான்று கேட்டு அவர் விண்ணப்பித்ததாக தெரிகிறது. அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை அடுத்து பால்ராஜ்  தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது  என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். மேலும் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்கினால், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதனிடையே 1997 அரசாணைப்படி மதம் மாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் தர மறுத்ததாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

click me!