
தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால், எம்.எல்.ஏக்களுக்கு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. அதனால், அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அரியணையை கைப்பற்றுவதில் ஓபிஎஸ்ஸும், சசிகலாவும் நீயா? நானா? என்று போட்டி போடுகின்றனர்.
ஓபிஎஸ்ஸுக்கு சொர்ப்பமாகவே அமைச்சர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சசிகலாவுக்கு பெரும்பாண்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு சிலர் மிரட்டல் விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவலாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடலூரில் மஞ்சக்குப்பம் செல்வவிநாயகர் கோவில் பின்புறம் ஆக்கர் தெருவில் உள்ள அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இரண்டு காவலாளர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அந்த பகுதியில் இரவு நேரத்திலும் காவலாளர்கள் சுற்றுப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது நிலவி வரும் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை காரணமாகவும், அமைச்சர் எம்.சி.சம்பத்-க்கு சிலர் மிரட்டல் விடுத்துள்ள காரணத்தினாலும் அவரது வீட்டுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்றுத் தெரிவித்தார்.