"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!

Published : Jun 24, 2026, 09:00 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அங்கு பெருமளவில் மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. இதனால் அணையின் நீர் சேமிப்பு திறன் தற்போது வெறும் 18-20% ஆகக் குறைந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வைகை அணையில் மேற்கொள்ளப்படவுள்ள தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு ஏற்கனவே பெற்றுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி, வரவிருக்கும் மழைக்காலத்திற்குள் அணையின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை இலவசமாகப் பெறப் பதிவு செய்துள்ள நிலையில், தனியார் நபர்களுக்கு சட்டவிரோதமாக மண் விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

02:43ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் டிவி கே...! எம்.பி. கனிமொழி அதிரடி பேட்டி
03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !